வரலாற்றுமுக்கியத்துவமிக்க தீர்ப்பு நாளை! மஹிந்த – ரணில் தொலைபேசியில் பேச்சு!!

வரலாற்றுமுக்கியத்துவமிக்க தீர்ப்பு நாளை! மஹிந்த – ரணில் தொலைபேசியில் பேச்சு!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கிடையே முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது என அரசியல் வட்டாரங்கலிருந்து அறியமுடிகின்றது.

தொலைபேசியூடாகவே இருவரும் பேசிக்கொண்டனர் என்றும், மதத்தலைவர் ஒருவரின் முயற்சியாலேயே இது நடந்துள்ளது என்றும் தெரியவருகின்றது.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமாக எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு

அதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான உயர்நீதமன்றத்தின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. அந்த தீர்ப்பு வெளியான பின்னர் அரசியல் குழப்பம் தீரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலுள்ள அவதானிகளும், நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். நிறைவேற்று, சட்டவாக்கம், நீதியென முத்துறைகளும் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகின்றது.

ஆசிரியர் - Editor II