2,278 மில்லியன் ரூபா பெறுமதியான ஹொரோயின் மீட்பு – தேடுதல் வேட்டையில் இரண்டாவது சாதனை!

2,278 மில்லியன் ரூபா பெறுமதியான ஹொரோயின் மீட்பு – தேடுதல் வேட்டையில் இரண்டாவது சாதனை!

பேருவளை – பலப்பிட்டிய கடற்கரையில் சுமார் 231 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ஹெரோயின் தொகை இதுவாகும் என்றும், இதன் பெறுமதி 2778 மில்லியன் ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், கடற்படையின் உதவியோடு நடத்திய விசேட தேடுதல் வேட்டையின்போதே – பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 34 வயதுடைய இரண்டு பேர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், படகும் மீட்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பலகோணங்களில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

ஆசிரியர் - Editor II