தலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் - 14 பேர் பலி

தலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் - 14 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் இராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், கஸ்னி மாகாணத்தில் உள்ள தேஹ்யாக் மாவட்டத்துக்குட்பட்ட சுலிமன்ஸாய் கிராமத்தில் தலிபான்கள் ரகசியமாக கூடி ஆலோசனை கூட்டம் நடத்துவதாக இராணுவ உயரதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, அந்த கிராமத்துக்கு இராணுவ வீரர்கள் விரைந்தனர். அப்போது தலிபான்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 14 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர் - Editor II