காற்றை மாசுபடுத்துவதில் இந்தியாவுக்கும் பெரும் பங்கு

காற்றை மாசுபடுத்துவதில் இந்தியாவுக்கும் பெரும் பங்கு

காபனீரொட்சைட் வாயுவை வெளியேற்றுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு உலக அளவில் 7 சதவீதம் அளவுக்கு இந்தியா காபனீரொட்சைட் வாயுவை வெளியேற்றியுள்ளது.

'கார்பன் ப்ராஜட்' என்ற அமைப்பு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காபனீரொட்சைட் வாயுவை வெளியேற்றுவதில் சீனா (27 சதவீதம்) முதல் இடத்தில் உள்ளது.

2018 ம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் காபனீரொட்சைட் வாயு உமிழ்வு 6.3 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எரிபொருட்களால் இந்த மாசு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி (7.1 சதவீதம் ),எரிபொருள் (2.90), எரிவாயு (6 சதவீதம்) என காற்று மாசடைவது தெரியவந்துள்ளது. தற்போது, 41 சதவீதமாக உள்ள காற்றுமாசு, 2018 ம் ஆண்டில் 1.8 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே கண்ணுக்கு தெரியாத அளவு காற்று மாசு ஏற்படுகிறது. பலருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

சீனாவிலும், இந்தியாவிலும் பொருளாதார ரீதியாக நிலக்கரி பயன்பாடு அதிகமாக உள்ளது. இதற்கு மாற்றாக 2020 ம் ஆண்டுக்குள் சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சார பயன்பாடு அதிகரித்தால் காற்று மாசு குறையும் என சோலார் எனர்ஜி கூட்டமைப்பு நாடுகள் மாநாட்டில் இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II