மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி ரணில் வசம், கழற்றி விடப்பட்டாா் டீ.எம்.சுவாமிநாதன்..

மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி ரணில் வசம், கழற்றி விடப்பட்டாா் டீ.எம்.சுவாமிநாதன்..

ஐக்கியதேசிய கட்சி தலமையிலான புதிய அரசாங்கத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் ரணில் வி க்கிரமசிங்க வசம் சென்றிருக்கின்றது. 

இவ்வாறு மொத்தமாக 7 அமைச்சு துறைகள் ரணில் விக்கிரம சிங்கவின் கீழ் சென்றிருக்கின்றது. இதேவேளை மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த டீ.எம்.சுவாமிநாதனுக்கு எந்த அமைச்சுக்களும் இந்த முறை வழங்கப்படவில்லை. 

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வில் மேற்படிப் பொறுப்புக்களை பிரதமர் ரணில் ஏற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஆசிரியர் - Editor II