153.8 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

153.8 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட D3,பன்னங்கண்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (20) மாலை 153.8 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப் படைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை முற்றுகை இட்டு சோதனை செய்த போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 29 பொதிகளில் அடைக்கப்பட்ட 153.8 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பத்து இலட்சம் ரூபா பணமும் சந்தேக நபர் பாவித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் அதிரடிப் படையினர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளனர். 

நாளை சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor II