எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.

எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.

எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி தொடர்ந்து நீடிக்கும் என கூறப்படும் நிலையில் இந்த பிரச்சினை தொடர்பில் 

 விரைவில் அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வெளியாகிய நிலையில் இன்றைய தினம் இறுதி முடிவு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும்

 சமகால எதிர்க்கட்சித் தலைவராக செயற்படும் இரா.சம்பந்தனும் அவரது பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II