வெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)

வெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)

கிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் இரணைமடு குளம் திறப்பு ஆகியவற்றினால் பெரும் வெள்ளப்பாதிப்பு உரு வாகியுள்ளது. இந்நிலையில் கண்டாவளை பிரதேச செயலகத்தை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு சிக்கிக் கொண்ட அரச ஊழியா்களை கடற்படையினா் மற்றும் இராணுவத்தினா் இணைந்து மீட்டுள்ளனா். 

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து கனகராயன் ஆற்றுப்படுக்கையின் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் அனர்த்தத்தினால் 

பாதிக்கப்பட்ட மககளுக்;கு உதவும் பொருட்டு பிரதேச செயலத்தில் உத்தியோகத்தர்கள் தங்கியிருந்தமையால் இன்று  பிற்பகல் தீடிரென வெள்ளம் புகுந்தமையால் அங்கிருந்த உத்தியோகத்தர்களை மீட்பதில் பாரிய நெருக்கடி நிலை காணப்பட்டது.

பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் அலுவலக ஆவணங்களையும் பணியாளர்களையும் மீட்டபோதும் முழுமையாகப்பணியாளர்களை மீட்கமுடியாது தீடிரென வெள்ளம் உய ர்வடைந்துள்ளது.

இதனையடுத்து, கடற்படையினரின் உதவியுடன் படகு மூலம் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டனர்.

ஆசிரியர் - Editor II