முல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)

இன்று பகல் மற்றும் நேற்று இரவு வேளைகளில் பெய்த கன மழை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் முல்லைத்தீவு முறிப்புப் பகுதியும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முறிப்புக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், 

ஆற்று நீரினுடைய நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளது. இதனால் முறிப்புப் பகுதியில் அமைந்துள்ள பால்பண்ணைக் கிராமத்தினுள் நீர் உட்புகுந்துள்ளது.

இதனையடுத்து காவற்றுறையினர், இராணுவத்தினர், அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர், சமூகமட்ட அமைப்புகளின் உதவியுடன், 

அப்பகுதியில் வசிக்கின்ற 35 குடும்பங்களைச் சேர்ந்த 108பேர் முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உணவு வசதிகளும் ஏற்றபடுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilan24 செய்திகளுக்காக முல்லைத்தீவிலிருந்த விஜயரத்தினம் சரவணன்..


ஆசிரியர் - Editor II