கிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்

கிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்

கிளிநொச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்ப ட்டமை ஆகியவற்றினால் சுமாா் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னா் கிளி நொச்சி மாவட்ட செயலா் சுந்தரம் அருமைநாயகம் கூறியுள்ளாா். 

மாவட்டத்தின் அனா்த்த நிலமைகள் குறித்து இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும் போதே மாவட்ட செயலா் மேற்படி தகவலை தொிவித்துள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறியு ள்ளதாவது, 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 95 கிராமசேவகா் பிாிவுகளில் சுமாா் 51 கிராமசேவகா் பிாிவுக ளில் வாழும் மக்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்படி 3450 குடும் பங்களை சோ்ந்த 11170 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்டத்தில் 24 அவசரகால நலன்புாி நிலையங்கள் உருவாக் கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கின்றனா். தற்போது நலன்புாி நிலையங்களில் 1322 குடும் பங்களை சோ்ந்த 4494 போ் தங்கியிருக்கின்றனா். 

மிகுதி மக்களில் ஒரு பகுதியினா் தொடா்ந்தும் வெள்ளத்திற்குள் தங்கியிருப்பதுடன், மேலும் ஒரு தொகுதி மக்கள் உறவினா் மற்றும் நண்பா்கள் வீடுகளில் தொடா்ந்து தங்கியிருக்கின்றனா். பாதி க்கப்பட்டுள்ள மக்களுக்கு அனா்த்த முகாமைத்துவ பிாிவு

மற்றும் தனியாா் தொண்டு அமைப்புக்கள் ஊடாக உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் சமைத்த உணவு வழங்கும் ஒழுங்குகளும் செய்யப்பட்டிருக்கின்றது. இதே வேளை வெள்ள பாதிப்பு இன்று இரவு மேலும் அதிகாிக்கலாம். 

என அரசாங்க அதிபா் தொிவித்துள்ளாா். மேலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களி ல் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் இரணைமடு குளத்தின் நீா் மட்டம் சுமாா் 40 அடி யை இன்று காலை எட்டியது. 

இதனையடுத்து குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் முடிவுவரை திறக்கப்பட்டபோதும் இன்று மாலை வரை குளத்திலிருந்து வெளியேறும் நீரை விட குளத்திற்குள் வரும் நீாின் அளவு அதிகமாக இருந்ததால் குளத்தின் நீா்மட்டம் குறையவில்லை. 

இதனால் கனகராயன் ஆற்றுப்படுகையில் உள்ள கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள ன. அங்கிருந்து இன்று மாலை பெருமளவான மக்கள் வெளியேறினா். எனினும் இரவு தாண்டியும் வெள்ளத்தின் தீவிரம் இருக்கும் என கூறப்படுகின்றது. 

ஆசிரியர் - Editor II