யாழில் மாதிரி கிராமத்தை கையளித்த சஜித்!

யாழில் மாதிரி கிராமத்தை கையளித்த சஜித்!
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் யாருவருக்கும் வீடு செமட்ட செவன திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் அமைப்பப்பட்ட மாதிரிக் கிராம வீட்டுத் திட்டம் இன்று பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்கு ஊரெழுப் பகுதியில் பொக்கணை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த மாதிரிக் கிராமத்தை இன்று திங்கட்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா திறந்து வைத்து, வீடுகளையும் உரிமையாளர்களிடம் கையளித்தார்.

யாவருக்கும் வீடு என்ற செமட்ட செவன திட்டத்தில் 274 ஆவது திட்டமாக யாழ்.ஊரெழுப் பகுதியில் மாதிரிக் கிராம விடுகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்பட்ட 19 வீடுகளையும் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதன் போது வீட்டு திட்டத்தை திறந்து வைத்த அமைச்சர் சஜித் பிரேமதாசா வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுப் பத்திரங்களையும் வழங்கி வைத்தார். பயனாளிகளிற்கு வீட்டு உபகரணங்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் என்பனவும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.


 
இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் அரச அதிகாரிகள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆசிரியர் - Shabesh