சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைவு - வவுனியா இளைஞன் கைது

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைவு - வவுனியா இளைஞன் கைது
  சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கை பிரஜை ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று (09) கைதுசெய்துள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் - Shabesh