பாதாள உலக கஞ்சிபானைக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாதாள உலக கஞ்சிபானைக்கு விளக்கமறியல் நீடிப்பு
பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரானை இம்மாதம் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சிபானை இம்ரான், ஹெரோயின் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனது சகாக்களை விடுவிக்க இவ்வாறு வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய மோசடி தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை அச்சுறுத்தியுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கொழும்பு பிரதான நீதிவனிடம் தெரிவித்தது.
இதனையடுத்து கஞ்சிபானை இம்ரானை இம்மாதம் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆசிரியர் - Shabesh