சஜித் பிறேமதாஸவுடன் கூட்டமைப்பு இரகசிய சந்திப்பு..!

சஜித் பிறேமதாஸவுடன் கூட்டமைப்பு இரகசிய சந்திப்பு..!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களை அமைச்சா் சஜித் பிறேமதாஸ இன்று யாழ்.நகாில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரகசியமாக சந்தித்து பேசியுள்ளாா். 
இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்தின, 

யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இச்சந்தப்பு எதற்காக நடைபெற்றது எனவும், 
என்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படதெனவும் இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Shabesh