1000

முதன் முறையாக சுவிஸ் மேற்கொண்ட முக்கிய முடிவு: இரட்டைக் குடியுரிமையால் சிக்கல்?

முதன் முறையாக சுவிஸ் மேற்கொண்ட முக்கிய முடிவு: இரட்டைக் குடியுரிமையால் சிக்கல்?
ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு தண்டனை பெற்ற சுவிஸ் குடிமகன் ஒருவரின் குடியுரிமையை முதன் முறையாக சுவிஸ் அரசாங்கம் பறித்துள்ளது.
சட்டப்பிரிவு 42-இன் படி சுவிட்சர்லாந்தின் நலன்களுக்கு அல்லது நற்பெயருக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டால், குறித்த நபரின் குடியுரிமையை பறிக்கலாம்.
மட்டுமின்றி சுவிஸ் குடியுரிமை ஒழுங்குமுறை பிரிவு 30 இன் படி நபர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்லது வன்முறை தீவிரவாதம் தொடர்பாக கடுமையான குற்றத்தைச் செய்திருந்தால் அவரது குடியுரிமையை பறிக்கலாம்.
மேலும், நபர் ஒருவர் தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பில் பிரசாரம் மேற்கொண்டதன் பேரில் பல ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தாலும் குடியுரிமையை பறிக்க வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், குறித்த நபருக்கு இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாட முழு சுதந்திரம் உள்ளது எனவும் அரசு அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II