1000

ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது – ஸ்டாலின்

ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது – ஸ்டாலின்
எப்படியாவது ஹிந்தியை தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹிந்தி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில்இ ஒரே நாடுஇ ஒரே மொழி என்ற தலைப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவத்துள்ள ஸ்டாலின்இ 'மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசுஇ பல வித முயற்சிகளை செய்து எந்தப் பக்கத்தில் இருந்தாவது ஹிந்தியை தமிழகத்தில் திணித்துவிட முயற்சிக்கிறது'எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால்இ அது பலராலும் பேசப்படும் ஹிந்தி மொழியால் மட்டுமே முடியும் என அமித்ஷா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II