1000

ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தூக்கிட்டு தற்கொலை-அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு

ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் தூக்கிட்டு தற்கொலை-அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு
ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் கோடல சிவபிரசாத் ராவ்இ தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த கோடல சிவபிரசாத்இ இன்று (திங்கட்கிழமை) ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்ட குடும்பத்தினர்இ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும்இ அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த கோடல சிவபிரசாத்இ தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
ஆந்திரா அரசியல் மூத்த தலைவர்களுள் ஒருவரான கோடல சிவபிரசாத்இ என்.டி.ராமாராவ் தலைமையிலான அரசில் உட்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஆவார்.
இவர் மீதுஇ ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைந்ததும்இ பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. சட்டப்பேரவையில் இருந்த நாற்காலிகளை தனது வீட்டில் வைத்திருந்ததாக கோடல சிவபிரசாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையிலேயே 72 வயதான கோடல சிவபிரசாத் ராவ்இ தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஆந்திர முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோடல சிவபிரசாத் ராவ்வின் மறைவுக்குஇ இரங்கல் தெரிவித்துள்ளார்.ஆசிரியர் - Editor II