1000

மீண்டும் திரைக்குவருகிறார் இம்சை அரசன் ....

மீண்டும் திரைக்குவருகிறார் இம்சை அரசன் ....
இம்சை அரசன் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் வைகை புயல் வடிவேலு தான் இம்மாத இறுதிக்குள் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படப்பிடிப்பில் வடிவேலுக்கும் இயக்குனர் சிம்பு தேவனுக்கும் மோதல் ஏற்பட்டு படம் நின்று போனது. இதனால் தனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் மீண்டும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று வடிவேல் உறுதியாக மறுத்து விட்டார். இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக வடிவேலு தெரிவித்துள்ளமை மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் - Editor II