மொழிப் போராட்டம்: இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை

மொழிப் போராட்டம்: இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் – கமல் சூளுரை
எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார் ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று மீண்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால் அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக்கள் வந்தன. திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிராக இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்று தீவிரமாக விமர்சித்திருந்தார்.
அதேசமயம் நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா'வோ மாற்ற முயற்சிக்க கூடாது என்று அமித் ஷாவின் கருத்திற்கு மக்கள் நீதி மைய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன்இ தனது டுவிட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றின் மூலம் விமர்சித்திருந்தார்.
இந்த கருத்துகளுக்கு எதிர்வினையாக கமலும் ஸ்டாலினும் ஹிந்தி எதிர்ப்பு என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமண்ய சுவாமி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்த கமலிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறிய அவர்இ ஏற்கனவே கூறப்பட்ட விடயங்களையே நான் ஒரு விடியோவாக வெளியிட்டேன். எத்தனை  மொழிகளை வேண்டுமானாலும் நாம் ஏற்கத் தயார் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என கூறினார்.
மேலும் தமிழர்களுக்கு கவலை தரும் விட யங்கள் குறித்து முதலில் விவாதிப்போம் என்றும் சுப்பிரமண்யன் சாமி குறித்து பிறகு பேசலாம் எனவும் தெரிவித்தார்.
ஆசிரியர் - Editor II