1000

பல மொழிகள் இருப்பது பலவீனம் இல்லை- ராகுல் பதிலடி

பல மொழிகள் இருப்பது பலவீனம் இல்லை- ராகுல் பதிலடி
இந்தியாவில் இந்தி மொழியை தேசிய மொழியாக அறிவிக்கும் திட்டத்துக்குஇ காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் அமித் ஷாஇ இந்தி மொழியை இந்தியாவின் தேசிய மொழியாக அமுல்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இதற்கு பெரும் எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி தமது எதிர்ப்பை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தி தமது டுவிட்டர் தளத்தில்இ பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அமித் ஷாவின் இந்த முயற்சிக்குஇ பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II