1000

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா வருவாரா ?

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா வருவாரா ?
பொதுவாக நடிகை நயன்தாரா தன்னுடைய படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்த்து வருகிறார். பல சினிமா பிரபலங்கள் இது பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்வதும் உண்டு.
இந்நிலையில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறவுள்ளது. அதில் நயன்தாரா பங்கேற்பாரா இல்லையா என்பது தான் தற்போது அனைவரது மனதிலும் உள்ள கேள்வி. விஜய் படத்திற்காக நயன்தாரா இறங்கி வந்து இந்த விழாவில் பங்கேற்க முடிவெடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் - Editor II