இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது – காமராஜ்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது – காமராஜ்
பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக உணவுதுறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் தொடக்க கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ்இ தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்தோ தெரியாமலோ தளபதி என்று பெயர் சூட்டி விட்டார்கள் எனவும் அவர் முன்னெடுக்கும் போராட்டங்கள் ஒரு மாதம் கூட நீடிப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருந்ததால் தான் மாணவர்களின் கல்வி வளர்ச்சியடைந்ததாகத் தெரிவித்த அமைச்சர் காமராஜ்இ பேரறிஞர் அண்ணா வழியில் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் நிலையாக உள்ளதாகக் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுக்க அரசு சார்பில் சிபாரிசு செய்யப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
ஆசிரியர் - Editor II