1000

இருவருக்கும் இடையிலான சந்திப்பு முக்கிய பங்கு வகிக்காது: சீனா

இருவருக்கும் இடையிலான சந்திப்பு முக்கிய பங்கு வகிக்காது: சீனா
பிரதமர் மோடி- சீன ஜனாதிபதி ஷி.ஜின்பிங் இடையே நடக்கும் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காதென  சீனா அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி.ஜின்பிங் இடையிலான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு எதிர்வரும் ஒக்டோபர் 10 முதல் 12ஆம் திகதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியுள்ளதாவதுஇ 'ஜனாதிபதி ஷி ஜின்பிங்குக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பே இடம்பெற இருக்கின்றது.
இந்த சந்திப்பின் போது என்ன பேச வேண்டும் என்பதை இரு தலைவர்களும் முடிவு செய்து கொள்ளட்டும். காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா பாகிஸ்தான் இடையிலான இரு தரப்பு விவகாரம். ஆகையால் காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது.
இந்த விவகாரத்தில் போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளும் பிரச்சினையை அமைதியாக பேசி தீர்த்து கொள்வதையே நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்கா- ஈரான் இடையிலுள்ள உறவை விட இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படுமென  நம்புகிறோம்' என கூறியுள்ளார்.


ஆசிரியர் - Editor II