1000

எந்த மொழியையும் பலவந்தமாக திணிக்க முடியாது- ரஜினிகாந்த்!

எந்த மொழியையும் பலவந்தமாக திணிக்க முடியாது- ரஜினிகாந்த்!
இந்தியாவில் ஹிந்தி மொழியை பொதுமொழியாக அறிவிக்கும் முயற்சிக்கு திரைப்பட நடிகர் ரஜினிகாந்தும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் பொதுமொழியாக ஹிந்தி மொழியை அறிவிப்பதற்குஇ அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி எடுத்து வருகிறார்.
இதற்கு ஏனைய மாநிலங்களில் பெரும் எதிர்ப்புகள் உருவாகி இருக்கின்றன. அண்மையில் நடிகர் கமல் ஹாசனும் இதனை எதிர்த்திருந்தார். தற்போது ரஜினிகாந்தும் இதனை எதிர்த்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
எந்த மொழியையும் பலவந்தமாக திணிக்க முடியாது என்றும் அது ஐக்கியத்தை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் - Editor II