1000

ஆறுதல் படுத்துவதாக கூறி புகலிடக் கோரிக்கையாளரின் வெறிச்செயல்: நீதிமன்றத்தை நாடிய சுவிஸ் பெண்மணி!

ஆறுதல் படுத்துவதாக கூறி புகலிடக் கோரிக்கையாளரின் வெறிச்செயல்: நீதிமன்றத்தை நாடிய சுவிஸ் பெண்மணி!
சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் தனியாக இருந்த பெண்மணியிடம் அத்துமீறிய புகலிடக் கோரிக்கையாளரை நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நைஜீரிய நாட்டவரான 36 வயது நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய 19 மாத சிறை தண்டனையும்இ 4 ஆண்டுகள் நன்னடத்தை சோதனை காலம் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பாஸல் மண்டலத்தில் குடியிருக்கும் 45 வயது பெண்மணியிடம் குறித்த நைஜீரிய நாட்டவர் அத்துமீறியுள்ளார்.
சம்பவத்தன்று மாலைஇ அந்த நைஜீரிய நாட்டவர் தமது மனைவியுடன் அவரது நண்பர் ஒருவரை சந்திக்கும் பொருட்டு சென்றபோதேஇ
பாதிக்கப்பட்ட பெண்மணியை முதன் முறையாக சந்தித்துள்ளார். அந்த பெண்மணி அப்போது தமது குடியிருப்பின் மொட்டைமாடியில் அமர்ந்தவாறே கலங்கிய கண்களுடன் இருந்துள்ளார்.
இவர் தமது மனைவியுடன் நண்பரை சந்தித்துவிட்டு திரும்பும் வழியில் அந்த சுவிஸ் பெண்மணியை பார்த்துவிட்டு சென்றுள்ளார். சில நிமிடங்களில் திரும்பி வந்த அந்த நைஜீரியர் குறித்த பெண்மணியின் குடியிருப்புக்கு சென்று கதவை தட்டியுள்ளார்.
கதவை திறந்த பெண்மணியை வலுக்கட்டாயமாக அணைத்து முத்தமிட முயன்றுள்ளார் இந்த நைஜீரியர். மட்டுமின்றி அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். ஆனால் இதை சற்றும் எதிர்பாராத சுவிஸ் பெண்மணி உதவி கேட்டு அலறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த விவகாரம் அனைத்தும் நீதிமன்றத்தில் நிரூபணமான நிலையில் டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் தமது பெண்ணுறுப்பில் சிராய்ப்புகள் ஏற்பட்டதை மருத்துவ அறிக்கைகள் மூலம் நீதிமன்றத்தில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும் டி.என்.ஏ சோதனையில் அவருக்கு எதிரான முடிவுகள் வெளியானது. இந்த வழக்கில் ஆணின் டி.என்.ஏ முக்கியமல்ல என கருதிய நீதிமன்றம் தற்போது அந்த நபருக்கு சிறை தண்டனையும் 7,000 பிராங்குகள் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆசிரியர் - Editor II