1000

அதிர்வலைகளை உருவாக்குமா விஜயின் பேச்சு? – பிகில் இசை வெளியீடு இன்று!

அதிர்வலைகளை உருவாக்குமா விஜயின் பேச்சு? – பிகில் இசை வெளியீடு இன்று!
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜயின் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்வில் விஜய் என்ன பேசுவார் எனும் எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
விஜயின் இதற்கு முந்தைய இசை வெளியீடுகள் யாவற்றிலும் விஜயால் பேசப்பட்ட கருத்துக்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில்இ இன்றைய பேச்சு குறித்த எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
சென்னை- சாய்ராம் கல்லூரியில் குறித்த இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதுடன் இவ்விழாவில் பல சிறப்பு நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்றைய தினம் நடைபெறவுள்ள குறித்த இசை வெளியீட்டு விழாவானது தளபதி விஜய் ரசிகர்களுக்கான மிகப்பெரிய விருந்தாகவும் அமையவிருக்கின்றது.
பிகில் திரைப்படத்தின் ஒரு சில பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில்இ இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ஏனைய பாடல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.
அத்துடன் இந்த இசை வெளியீட்டு விழாவில் மிக முக்கிய நிகழ்வாகஇ இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சிறப்பு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II