1000

ஆந்திரா படகு விபத்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

ஆந்திரா படகு விபத்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!
ஆந்திரா மாநிலம்- கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில்இ உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளது.
இதில் 23பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் இதுவரை 28பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில்இ நேற்று 6 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனூடாக உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 34ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில்  காணாமல் போயுள்ள ஏனையோரை தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம்- கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள தேவிபட்டனம்இ கண்டி போச்சம்மா ஆலயத்துக்கு படகு சவாரி இயக்கப்படுகிறது.
அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 61 பேரை ஏற்றிய படகு கச்சளூரு பகுதியில் வரும் போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்கள் பலர்இ பாதுகாப்பு உடைகள் இல்லாதமையினால் தண்ணீரில் மூழ்கினர். விபத்து நடந்த படகில் 11 ஊழியர்கள் உட்பட 61 பேர் பயணித்தனர்.
இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படைஇ விபத்தில் சிக்கியவர்களில் 27 பேரை மிகவும் பாதுகாப்பாக மீட்டுஇ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தது.
அந்தவகையில் நேற்று முன்தினம் வரை 28 சடலங்களை கண்டெடுத்திருந்த மீட்பு குழு நேற்று மேலும் 6 பேரின் சடலங்களை கண்டெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor II