1000

கனடாவில் கொலை செய்யப்பட்ட தர்ஷிகா - யாழில் கதறியழும் பெற்றோர் கூறியது என்ன?

கனடாவில் கொலை செய்யப்பட்ட தர்ஷிகா - யாழில் கதறியழும் பெற்றோர் கூறியது என்ன?
கனடாவில் தனது முன்னாள் கணவனால் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண்ணின் பெற்றோர் யாழ்ப்பாணத்திலிருந்து கதறியழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
எங்கள் மகளை ஒரு முறை கடைசியாக பார்க்கவேண்டும்இ எங்கள் வீட்டின் விளக்கு அணைந்துவிட்டதுஇ குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என அனுப்பி வைத்த பெண்ணை ஈவிரக்கமின்றி கொன்றுவிட்டானே என கதறுகிறார்கள் தர்ஷிகாவின் பெற்றோர்.
ஏழ்மையான குடும்பம் தர்ஷிகாவின் குடும்பம். எளிமையாக வாழும் பெற்றோர்இ இன்னும் திருமணமாகாத இரண்டு சகோதரிகள்இ இரண்டு சகோதரர்கள் என ஒரு நடுத்தரக் குடும்பம்தான் அது.
கனடா சென்றால் ஒருவேளை தனது குடும்பத்தை கொஞ்சம் நல்ல நிலைமைக்கு கொண்டுவரலாம் என எண்ணிச் சென்ற தர்ஷிகாஇ கனடா சென்று ஒரு வாரம் கூட ஆகவில்லை.
ரொரன்றோவில்இ தர்ஷிகாவை அவரது முன்னாள் கணவர் சசிகரன் தனபாலசிங்கமே பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொன்றார். அவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்இ எனது பிள்ளையை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் கடைசிவரை சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது என்கிறார் தர்ஷிகாவின் தாய்.
எனது அழுகுரல் கனடாவிலுள்ள நீதித்துறையின் காதுகளில் விழட்டும் என கதறும் அந்த தாயின் குரல் கேட்கவேண்டியவர்களில் செவிகளில் ஒலிக்கட்டும்!

ஆசிரியர் - Editor II