1000

மஸ்கெலியா குடியிருப்பு பகுதியில் தீ - 13 வீடுகள் எரிந்து நாசம்!

மஸ்கெலியா குடியிருப்பு பகுதியில் தீ - 13 வீடுகள் எரிந்து நாசம்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலைஇ கொழும்பு தோட்டத்தின் ஸ்காப்ரோ பகுதியிலுள்ள 28 வீடுகள் அடங்கிய குடியிருப்புத் தொகுதியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 13 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தீ பரவலை அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அப்பகுதி கிராம சேவகர் தெரிவித்துள்ளார்.
குறித்த குடியிருப்புகளில் வசித்து வந்த 140 பேரில் 29 பாடசாலை மாணவர்களும் 28 தொழிலாளர்களும் உள்ளடங்குகின்றதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இ பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தோட்ட ஆலய மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II