தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதாக கூறி 10 லட்சத்தை சுருட்டிய நபர்!

தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதாக கூறி 10 லட்சத்தை சுருட்டிய நபர்!
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுஇ பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களில் மூவரை விடுவித்து தருவதாகக் கூறிஇ உறவினர்களிடமே பணம் வசூலித்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமையவே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் தன்னுடைய உறவினர்களிடமிருந்து 10 இலட்சத்து 11ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணைகளிலிருந்து கண்டறிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் 48 வயதான கொடிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் யூசுப் மொஹமட் ஸ்மின் என்பவரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்லதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவரையும் மற்றும் பயங்கரவாத புலனாய்வு விசாரணைப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ள இருவரையுமே தான் விடுவித்து தருவதாகக் கூறிஇ குறித்த நபர் பணத்தை வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II