1000

சஜித் பிரேமதாச தனித்துப் போட்டி?

சஜித் பிரேமதாச தனித்துப் போட்டி?
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தனித்துப் போட்டியிடத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சஜித் அணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நடத்திய கூட்டம் ஒன்றில் இது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
கட்சியின் தலைமைப்பீடம்இ சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கா விட்டால்இ மாற்றுத்தீர்மானம் எடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆசிரியர் - Editor II