1000

விசாரணை நடத்தப்பட வேண்டும்...

விசாரணை நடத்தப்பட வேண்டும்...
அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போதுஇ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த ஹக்கீம்இ இந்த நடவடிக்கையின் பின்னணியில் பிரதமர் ரணில் செயற்பட்டிருப்பதாக கண்டுபிடித்திருப்பதாகவும்இ இது தோல்வியின் விளிம்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக ஹக்கீமிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அசூ மாரசிங்க கூறியுள்ளார்.
ஆசிரியர் - Editor II