1000

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது!

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது!
முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தினைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர்இ மத்திய முன்னாள் இணை அமைச்சரும் பாஜக தலைவருமான சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துஇ காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாயமான குறித்த மாணவிஇ ராஜஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தநிலையில் மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டிற்கு அமைய சின்மயானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மாணவியின் முறைப்பாடு குறித்து சிறப்பு விசாரணைக்குழு சின்மயானந்தாவிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்நிலையில்இ ஒரு வருடத்திற்கு மேலாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் சட்ட மாணவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை 43 காணொளி விசாரணை நடத்திவரும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஆதாரமாக வழங்கினார். இந்தநிலையில் மத்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசிரியர் - Editor II