1000

யாழில் பரபரப்பு! யாழ் பிரபல கல்லுாாி அதிபா் கைது!

யாழில் பரபரப்பு! யாழ் பிரபல கல்லுாாி அதிபா் கைது!
யாழில் உள்ள பிரபல கல்லுாாி ஒன்றின் அதிபா் இன்றைய தினம் 8 ஆம் பாட நேரத்தில் லஞ்ச ஒழிப் பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.இந்துக் கல்லுாாியின் அதிபா் சதா நிமலன் இவ்வாறு லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கையும் களவுமா க கைது செய்யப்பட்டிருக்கின்றாா்.
கடந்த இரு தினங்களுக்கு முன் குறித்த அதிபரை கைது செய்ய முயற்சிக்கப்பட்டபோதும் தப்பித்துக் கொண்ட அவர் சற்று முன்னா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் திட்டமிட்டு அனுப்பபட்ட ஒருவாிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோதே குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்நிலையில் போதிய ஆதாரங்களுடன் அதிபா் கைது செய்யப்பட்டமை தொடா்பில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
குறித்த அதிபர் ஏற்கனவே மாணவர்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதிபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் குறித்த பாடசாலை அதிபர் இன்று இலஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப் பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு;
இதேவேளை குறித்த பாடசாலை அதிபரின் முறைகேடு தொடர்பில் எமது இணையத்தளம் கடந்த இருதினங்களிற்கு முன்பு அம்பலப்படுத்தியிருந்த நிலையில்இ அதனை மாணவர்ளும்இ வேறுபலரும் மறுத்திருந்தனர்.
இந் நிலையில் மீண்டும் இன்றைய தினம் ஆதாரங்களுடன் குறித்த அதிபர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
இணைப்பு
ஆசிரியர் - Editor II