1000

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு!

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு!
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) 13ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில்இ மற்றுமொரு கலந்துரையாடலை இந்த வாரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஆ.ஆ.P.மு. மாயாதுன்னே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பளப் பிரச்சினை தொடர்பாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் இடைக்கால பரிந்துரையொன்றை முன்வைத்தபோதிலும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர் - Editor II