1000

அவன்கார்ட் வழக்கு – தமயந்தி ஜயரத்னயை கைது செய்யுமாறு பிடியாணை!

அவன்கார்ட் வழக்கு – தமயந்தி ஜயரத்னயை கைது செய்யுமாறு பிடியாணை!
அவன்கார்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் 8 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன நீதிமன்றை புறக்கணித்து வௌிநாடு சென்றுள்ளதால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை வௌியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எவ்வாறாயினும் போதிய அளவு சாட்சியங்கள் இருந்தால் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் உரிய முறையில் வழக்கு தொடர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வாய்ப்புள்ளதாக நீதவான் அறிவித்தார்.
அதேபோல்இ பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன நீதிமன்றை புறக்கணித்து வௌிநாடு சென்றுள்ளதால் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
அவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக்கிடங்கு ஒன்றை நடாத்திச் செல்ல அனுமதி அளித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 


ஆசிரியர் - Editor II