1000

விடுதலை புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கோட்டாவுடன் இணைவு!

விடுதலை புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கோட்டாவுடன் இணைவு!
விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரும்இ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சே.ஜெயானந்தமூர்த்தி நேற்று பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளதாக பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பாசிக்குடாவில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சே.ஜெயானந்தமூர்த்தி உட்பட இன்னும் அவரின் ஆதரவாளர்கள் சிலரும் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஜெயானந்தமூர்த்தி 44இ457 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானவர் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.
இந்த நிலையில் ஜெயானந்தமூர்த்தியும்இ அவரது குடும்பத்தினரும் துணை இராணுவக் குழுவினரால் அடிக்கடி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வந்த நிலையில்இ ஐக்கிய இராச்சியத்திற்கு புலிகளின் தயவில் புலம் பெயர்ந்து சென்றவர்.
அங்கு புலம்பெயர் தமிழகளின் ஆதரவிலும் விடுதலைப்புலிகளின் ஆதரவிலுமே இவர் வயிறு வளர்த்தவர் என்பது பலரிற்கு மறந்திருக்காது என்பதோடு ஜெயானந்தமூர்த்தியும் மறந்திருக்க மாட்டார்.
இந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து நிலையில் இன்று ஜெயானந்தமூர்த்தி பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளார்.
இதேவேளை மரம்விட்டு மரம் தாவும் மந்தியைப்போல் பணம் தின்னியும் பிணம் தின்னியுமான இவரின் இந்த பிரவேசத்தினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா..? அல்லது மாட்டார்களா...? என அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆசிரியர் - Editor II