1000

வேட்பாளராக களமிறங்கவும் தயார் – குமார வெல்கம!

வேட்பாளராக களமிறங்கவும் தயார் – குமார வெல்கம!
சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவும் தான் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அத்தோடு சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவாராக இருந்தால் அவருக்கு ஆதரவு அளிக்கவும் தான் தயாராக உள்ளதாகவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்இ 'சுதந்திர கட்சி மற்றய கட்சிகளுக்கு பின் செல்லவேண்டிய தேவை இல்லைஇ ஸ்ரீ.ல.சு.க.வின் வேட்பாளரை நாங்கள் பெயரிட்டால்இ அது கட்சியின் வலிமையைக் காட்டும்.
ஜனாதிபதி மீண்டும் போட்டியிட்டால்இ அவரை ஆதரிக்க அனைவரும் தயாராக உள்ளனர். இருப்பினும்இ அவர் அவ்வாறு செய்யாவிட்டால்இ கட்சி மற்றொரு நபரை பெயரிட வேண்டும். கட்சிக்குள் யாரும் இல்லையென்றால்இ நான் களமிறங்க தயாராக இருக்கிறேன்.
மேலும் வலுவான முடிவுகளை எடுக்கக்கூடிய நபர்கள் எங்களிடம் உள்ளனர். சுதந்திர கட்சி பற்றி நாம் பேச வேண்டும். ஸ்ரீ.ல.சு.க. ஒரு தனி கட்சியாக போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன்' என கூறினார்.
ஆசிரியர் - Editor II