1000

இஸ்லாமிய மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது – பிபின் ராவத்!

இஸ்லாமிய மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது – பிபின் ராவத்!
ஜம்மு – காஷ்மீரில் இஸ்லாமிய மதம் தவறாக பயன்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி பிபின் ராவத் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
சென்னை மாமல்புரத்தில் பிரதமர் நரேந்திர மோடிஇ சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்இ 'ஜம்மு காஷ்மீரில் இஸ்லாம் மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அங்கு மதத்தின் பெயரால் தீவிரவாதம்தான் பரப்பப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் அவர்களை இயக்குகிற பாகிஸ்தானியர்களுக்கும் இடையேயான தகவல்தொடர்புதான் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில்இ தகவல் தொடர்பில் எந்த பிரச்சனையும் இல்லை.
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காகவே போர் நிறுத்த ஒப்பந்தங்களை பாகிஸ்தான் மீறுகிறது. அந்த நாட்டின் இந்த அணுகுமுறையை எப்படி எதிர்கொள்வது என்பது நமது இராணுவத்தினருக்கு தெரியும்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II