1000

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக காலிஇ களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையினை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ளது. இன்று முற்பகல் 11.30 மணிமுதல் நாளை முற்பகல் 11.30 மணிவரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் எனஇ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குஇ மத்தியஇ தெற்கு மற்றும் சபராகமுவ மாகாணங்களில் 200 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
ஆசிரியர் - Editor II