1000

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் சிக்கல் நிலை- ஜீ.எல்.பீரிஸ்!

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் சிக்கல் நிலை- ஜீ.எல்.பீரிஸ்!
கையூட்டல் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் மன்றாடியார் நாயகம்இ தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மற்றும்இ அவன்காட் நிறுவன தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்இ அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்க பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பழித்தீர்க்கும் நோக்கிலேயே பல வழக்குகளை பதிவு செய்து வந்துள்ளமை இதன் ஊடாக உறுதியாகி இருக்கிறது. இதனால் அரசாங்கத்தின் பல செயற்பாடுகள் குறித்த சந்தேகம் வலுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் - Editor II