1000

சிறப்பாக இடம்பெற்ற முனைப்பின் 10ஆவது கதம்பமாலை நிகழ்வு!

சிறப்பாக இடம்பெற்ற முனைப்பின் 10ஆவது கதம்பமாலை நிகழ்வு!
இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்கிவரும் முனைப்பின் 10வது கதம்பமாலை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ்லாந்து லுசேர்ன் மாநிலத்தில் அமைப்பின் தலைவர் மா.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் முனைப்பின் இலங்கைக்கான தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நம்மவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன்இ அதிஸ்டலாபச்சீட்டிழுப்பும் நடைபெற்றது.
முனைப்பின் இலங்கைக்கான தலைவரால் நம்மவர்கள் மத்தியில் பல்வேறு உதவிக்கோரிக்கைகள் முன் வைத்தபோது அக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மக்கள் நிகழ்வில் வைத்து பல்வேறு உதவிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II