1000

பிக்பொஸ் வீட்டின் காதல் நாயகனுக்கு இவ்வளவு சம்பளமா?

பிக்பொஸ் வீட்டின் காதல் நாயகனுக்கு இவ்வளவு சம்பளமா?
பிக்பொஸ் வீட்டின் காதல் நாயகன் என்றாலே நினைவுக்கு வரும் முதல் நபராக கவின் காணப்படுகிறார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 4 பெண்களுடன் நெருக்கமாக பழகிவந்த கவின்இ முதலில் சாக்ஷ்சியை காதலிப்பதாக கூறினார்.
இதன்பின்னர் சாக்ஷியுடனான காதல் முறிவு அனைவரும் அறிந்த ஒன்றே. அதுவரை நட்பாக பழகிய லொஸ்லியாவும் சாக்ஷி வெளியேறிய பிறகு தனது காதலை ஒப்புக்கொள்ளும் வகையில் அவர்களின் சம்பாசனைகள் இடம்பெற்றிருந்தன.
பிக்பொஸ் வீட்டை பொறுத்தவரையில் வெறும் காதல் மன்னனாகவே கவின் சித்தரிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருடைய காதல் லீலைகளே அனைவர் மத்தியலும் அவரை பிரபல்யப்படுத்தியது.
இவையொருப்புறம் இருக்க தற்போது இணையத்தளத்தில் வைரலாகிவரும் செய்தியாக கவினுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த செய்தி வலம் வருகின்றது.  அதாவது கடந்த வாரங்களில் இடம்பெற்ற நிகழ்ச்சியில்இ 5 இலட்சம் பணத்தை எடுத்துகொண்டு கவின் பிக்பொஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இவைதவிர கவின் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு நாள் ஒன்றிற்கு 35000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும்இ அவர் அந்த வீட்டில் 95 நாட்கள்  போட்டியாளராக பங்குவகித்தமையால் அவருக்கு 38 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. இதனை பார்க்கும் இணையத்தளவாசிகள் பிக்பொஸ் வீட்டில் சும்மா இருந்ததுக்கு இவ்வளவு சம்பளமா? என  நையாண்டி செய்து வருகின்றனர்.


ஆசிரியர் - Editor II