1000

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை திஹார் சிறையில் வைக்குமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தவும் நீதிமன்றம்  இன்று (செவ்வாய்க்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கனகபுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சிவக்குமார்இ முந்தைய காங்கிரஸ்- ஜே.டி.எஸ்.கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார்.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் செய்ததாக டி.கே. சிவக்குமார்இ ஹனுமந்தப்பாஇ கர்நாடக பவனில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு குற்றம் சுமத்திஇ கடந்த  வருடம் செப்டெம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தது. இவ்விடயம் தொடர்பாக 3 முறை சிவக்குமாரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 3ஆம் திகதி அவரை கைது செய்துஇ டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் முன்னிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
இதன்போது நீதிபதி அவரை அமலாக்கத்துறையினரின் காவலில் வைத்து விசாரணையை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில் திஹார் சிறையில் அடைத்து அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதன்போதுஇ அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து டெல்லியிலுள்ள ராம் மனோகர் லோகியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து சிவக்குமார் சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணியினால் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவை கடந்த 25 ஆம் திகதி விசாரித்த நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்து விட்டது.
இந்நிலையில் சிவகுமாரின் காவல் இன்றுடன் முடிவடைந்தமையினால் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அமலாக்கப்பிரிவு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிஇ 'சிவக்குமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் அவரிடம் போதுமான விசாரணை நடத்த முடியவில்லை. எனவே அவரை விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்' எனக் கோரினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அஜய் குமார்இ சிவக்குமாரின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து உத்தரவு பிறபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II