1000

பிக்போஸ் -முக்கிய அறிவிப்பு வெளியானது!

பிக்போஸ் -முக்கிய அறிவிப்பு வெளியானது!
பிக்போஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் லொஸ்லியாஇ சான்டிஇ முகேன் மற்றும் ஷெரின் ஆகிய நால்வர் போட்டியாளர்களாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில்இ இந்த நால்வரில் யார் டைட்டிலை வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்களை மட்டுமன்றி பார்வையாளர்களிடம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
அந்தவகையில் கவின் கடந்த வாரம் வெளியேறிவிட்டதால் அவரது ஆதரவாளர்கள் லொஸ்லியா மற்றும் சான்டி ஆகிய இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்கும் பகிர்ந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் திடீரென வெளியேறியதால்இ தர்ஷன் ஆதரவாளர்கள் முகேனுக்கு வாக்களிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.
எனினும் தற்போதைய நிலவரப்படி லொஸ்லியா அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும் இரண்டாம் இடத்தில் முகேன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சான்டி மற்றும் ஷெரின் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
இனிவரும் இரண்டு நாட்களில் பதிவாகும் வாக்குகளின் அடிப்படையில் இந்த நிலை மாறுமா அல்லது இதே நிலைமை நீடித்து லொஸ்லியா டைட்டிலை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் காணுப்படுகின்றது.
ஆசிரியர் - Editor II