பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி: உளவுத்துறையின் எச்சரிக்கை!

பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி: உளவுத்துறையின் எச்சரிக்கை!
டெல்லியில் தாக்குதல் நடத்தும் முனைப்புடன் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் திருமலை திருப்பதியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருமலை திருப்பதியில் பிரமோற்சவ விழா கோலகலமாக இடம்பெற்றுவருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருட சேவை இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதனைக் காண திரளான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.
இந்நிலையில்இ குறித்த விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொள்ளகூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்காரணமாக அந்த பகுதியில் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்இ பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டமைக்கு பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக சர்வதேசத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டிருந்தது. இருப்பினும் குறித்த முயற்சியும் தோல்வியை தழுவியது.
இதனையடுத்து இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்துஇ அதன்மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.
இதன்காரணமாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 முதல் 4 பயங்கரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி உள்ளதாகவும்இ பயங்கரவாத தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளதாகவும் உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II