சுதந்திரம் என்பது தொலைதூர கனவாகவுள்ளது – ப.சிதம்பரம்!

சுதந்திரம் என்பது தொலைதூர கனவாகவுள்ளது – ப.சிதம்பரம்!
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பது தொலைதூர கனவாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பா.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் சிதம்பரம் சார்பாக நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ 'சகோதரத்துவம் செத்து விட்டது. சாதி வெறியும்இ மத வெறியும் முன்னுக்கு வந்து விட்டன. சமத்துவம் என்பது தொலைதூர கனவாக இருக்கிறது. எல்லா ஆதாரங்களும் இந்தியர்களிடையே சமத்துவமின்மை வளர்ந்து வருவதை காட்டுகின்றன
பலவீனமாக ஒளிரும் ஒரே சுடர் சுதந்திரம் மட்டும்தான். அது பிரகாசமாக எரியுமா அல்லது செத்துப்போகுமா? காலம்தான் சொல்ல முடியும். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி ஓராண்டு கால கொண்டாட்டம் தொடங்கியுள்ள தருணத்தில்இ சுதந்திரம்இ சமத்துவம்இ சகோதரத்துவம் எங்கே என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும்' என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆசிரியர் - Editor II