1000

இம்ரான் கானின் பேச்சுகள் அவரது அறியாமை-அமைச்சர் ரவீஸ்குமார்

இம்ரான் கானின் பேச்சுகள் அவரது அறியாமை-அமைச்சர் ரவீஸ்குமார்
இந்தியாவிற்கு எதிராக பேசிவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுகள்இ பன்னாட்டு உறவுகள் எப்படி செயல்படுகின்றன என்பது பற்றிய அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது என மத்திய வெளியுறவு விவகார அமைச்சர் ரவீஸ்குமார் விமர்சித்துள்ளார்.
அத்துடன் அவரது பேச்சுக்கள்இ அறிக்கைகள் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூட்டம் ஒன்றில் உறையாற்றுகையில்இ காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியிருந்தார்.  இதற்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கும்போதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்இ  பாகிஸ்தானிடமிருந்து முதல் முறையாக இத்தகைய பேச்சுக்கள் வரவில்லை.  பாகிஸ்தான் பிரதமர் அரசமைப்புச் சட்ட ரீதியாக பெரிய ஒரு பதவியில் இருக்கிறார்இ இதற்கு முன்பும் கூட அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
ஐநா பொதுச்சபையிலும் அவரது இந்தக் குரலை நீங்கள் கேட்டிருக்கலாம். இம்மாதிரி பொறுப்பற்ற முறையில் அவர் பேசி வருகிறார்இ இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.
பன்னாட்டு உறவுகள் எப்படி நடந்து கொண்டிருக்கின்றன என்பது பற்றி அறிந்தவராக இம்ரான் கான் பேசவில்லை.  அதனால்தான் இப்படிப் பேசிவருகிறார். இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாக ஜிகாத் அறிவிக்கிறார் அவர். இது இயல்பான நடத்தையல்ல.
பாகிஸ்தான் ஒரு அண்டை நாடாக சாதாரணமாகஇ இயல்பாக நடந்து கொள்வது நல்லது என்று பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறோம்.  58 நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக இம்ரான் கூறுகிறார். அவரால் அந்த 58 நாடுகளின் பெயர்களைக் கூற முடியுமா? பட்டியலைக் காட்டுங்கள் என்றால் அவர்களால் காட்ட முடியாது என ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II