1000

யாரும் எல்லை தாண்டவேண்டாம் – இம்ரான் கான் எச்சரிக்கை!

யாரும் எல்லை தாண்டவேண்டாம் – இம்ரான் கான் எச்சரிக்கை!
காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காகவோஇ போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவோ யாரும் எல்லை தாண்ட வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து பாகிஸ்தானில் வாகன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இம்ரான்கான் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர்இ 'கா‌‌ஷ்மீரை சேர்ந்த தங்கள் சக கா‌‌ஷ்மீரிகளின் நிலையை பார்த்து வேதனை அடையும் கா‌‌ஷ்மீரிகளின் உணர்வுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன்.
ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவுவதற்காகவோஇ போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவோ யாரும் எல்லை தாண்ட வேண்டாம். அவ்வாறு தாண்டினால் அது இந்தியாவுக்கு சாதகமாகி விடும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பாகிஸ்தான் தொடர்சியாக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது.
இதன்காரணமாக சர்வதேசத்தின் உதவியை நாடிய பாகிஸ்தான் இறுதியில் போர் எச்சரிக்கையையும் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II