1000

போரில் வீரமரணமடையும் இராணுவ வீரர்களுக்கு சிறப்பு சலுகை : ராஜ்நாத் சிங் அறிவிப்பு!

போரில் வீரமரணமடையும் இராணுவ வீரர்களுக்கு சிறப்பு சலுகை : ராஜ்நாத் சிங் அறிவிப்பு!
போரில் வீரமரணம் அடையும் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரித்து இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
போரில் வீரமரணம் அடையும் வீரர்களுக்கு இரண்ட இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுவந்த நிலையில் அந்த தொகை தற்போது 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இராணுவ போர் விபத்து நல நிதியத்தில் இருந்த குறித்து நிதியுதவி வழங்கப்படவுள்ளது. மேலும் கருணைத்தொகையாக பதவிக்கு ஏற்ப 25 இலட்சம் முதல் 45 இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
அத்துடன் குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் 40 இலட்சம் முதல் 75 இலட்சம் ரூபாயும்இ இறப்பு இணைப்ப காப்பீட்டு திட்டதின்கீழ் 60 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேலும் வீர மரணம் அடையும் படைவீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச்செலவும் வழங்கப்படுகிறது. ரயில் கட்டணம் 70 சதவீதம் தள்ளுபடி மற்றும் மகள்கள் திருமண நிதி ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II